இருதய நோயிலிருந்து விடுபட , குறைய , வராமலிருக்க திருவலிவலம் மனத்துணைநாதர் கோவிலுக்கு சென்று அங்குள்ள இருதய கமலநாதேசுவரர் சுவாமியை வணங்கி கீழுள்ள பதிகங்களை பாடுங்கள். உள்ளம் உருக மனதிலே இறைவனை வேண்டிப்பாடினால் நிச்சயமாக இந்த மனத்துணைநாதர் அருள் கொடுப்பார் என்பது தொன்றுதொட்டு வருகின்ற நம்பிக்கை.
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே – திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் [திருவலிவலம்]
இது தேவரப்பாடல் பெற்ற கோவில்களில் , காவிரி தென்கரையில் இருக்கின்ற 121 வது தலமாக விளங்குகிறது. கோச்செங்கட்சோழன் அவர்களால் இந்த மாடக்கோவில் கட்டபட்டது.நாகை மாவட்டத்தில் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வழியில் கச்சனத்துக்கு அருகே அமைந்துள்ளது திருவலிவலம் திருத்தலத்தினை திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் நாயனார் மூவரும் புகழ்ந்து பாடியுள்ளனர். இங்கே வழிபாடு செய்பவர்களுக்கு மன அழுத்தம் , மனம் ஒருநிலைப்படாமை , இருதயநோய் போன்ற நோய்களில் இருந்து ஆறுதல் மற்றும் மாறுதல் கிடைக்கும்.இத்தலத்தில் கரிக்குருவி (வலியன்) பூசித்தது என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
சிவ சிவ
திருச்சிற்றம்பலம்ஒல்லையாறி உள்ளம்ஒன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே யுன்றன்நாமம் நாவில்நவின் றேத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனேஇயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநல்தே வரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதீ சாமவேதா காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவலமே யவனேபெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப்பெருங் கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனைநோய் நலியக்
கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலிக்கின் றதுள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவலமே யவனேமெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனையைத் துறந்து
செய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே
நைவன் நாயேன் உன்றன்நாமம் நாளும்நவிற் றுகின்றேன்
வையம்முன்னே வந்துநல்காய் வலிவலமே யவனேதுஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவனுன் திறமே
தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக்கீழ்ப் பணிய
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும்நினைந் தடியேன்
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனேபுரிசடையாய் புண்ணியனே நண்ணலார்மூ வெயிலும்
எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமையோர் பரவும்
கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய் வலிவலமே யவனேதாயுநீயே தந்தைநீயே சங்கரனே யடியேன்
ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக்கின் றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின்றொன் றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனேநீரொடுங்குஞ் செஞ்சடை யாய்நின் னுடையபொன் மலையை
வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தன்இரா வணனைத்
தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிரலால் அடர்த்த
வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனேஆதியாய நான்முகனும் மாலுமறி வரிய
சோதியானே நீதியில்லேன் சொல்லுவன்நின் திறமே
ஓதிநாளும் உன்னையேத்தும் என்னைவினை அவலம்
வாதியாமே வந்துநல்காய் வலிவலமே யவனேபொதியிலானே பூவணத்தாய் பொன்திகழுங் கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவிடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென் றிவர்கள்
மதியிலாதா ரென்செய்வாரோ வலிவல மேயவனேவன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவலமே யவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னுசோதி யீசனோடே மன்னியிருப் பாரே
பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள்
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே
ஊனங் கத்துயிர்ப் பாயுல கெல்லாம்
ஓங்கா ரத்துரு வாகிநின் றானை
வானங் கைத்தவர்க் கும்மளப் பரிய
வள்ள லையடி யார்கள்தம் உள்ளத்
தேனங் கைத்தமு தாகியுள் ளூறுந்
தேச னைத்திளைத் தற்கினி யானை
மானங் கைத்தலத் தேந்தவல் லானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே
நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண்
நம்பன்காண் நணுகாதார் புரமூன் றெய்த
வில்லான்காண் விண்ணவர்க்கும் மேலா னான்காண்
மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்
சொல்லான்காண் சுடர்மூன்று மாயி னான்காண்
தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான் ஈய
வல்லான்காண் வானவர்கள் வணங்கி யேத்தும்
வலிவலத்தான் காணவனென் மனத்து ளானே