ஆனி நிறைமதி 2024

இடம்: தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம்

திகதி: 21/07/2024 [ஆடி 4 சனிக்கிழமை] - 21/07/2024

நேரம்: மாலை 17.45 - 20.30
ஒவ்வொரு நிறைமதியன்றும், கொக்குவில் தென்னாடு அருள்மிகு மனோன்மணி அம்மனுடனுறை அருள்மிகு ஐம்பூதநாதப் பெருமானுக்கும், மனோன்மணி பெருமாட்டிக்கும், பரிவார தெய்வங்களுக்கும், அத்துடன் சித்தர்களுக்கும் அருள்நீராட்டு இடம்பெற்று பின்னர் நிறைமதிப் பூசை செந்தமிழ் மந்திரங்கள் ஒலிக்க நடைபெறும்.

பூசையைத் தொடர்ந்து திருமுறை வழிபாடு இடம்பெற்று, அடியார்களுக்கு திருநீறு, தீர்த்தம், சந்தனம், குங்குமம் மற்றும் ஐம்பூதநாதப் பெருமானுக்கு சாற்றிய மலர்கள் வழங்கப்படும்.நிறைமதி வழிபாட்டின் பின்னர், தென்னாடு திங்கள் இதழ் வெளியீடும் தொடர்ந்து அடியவர்களுக்கு இரவு உணவும், இறைவனுக்குப் படைத்த அருளமுதும் பரிமாறப்படும்.


அனுசரணை: திருமதி.நாகேஸ்வரி நாகராஜா மற்றும் பிள்ளைகள் (கொக்குவில் (கனடா))