சைவ அறங்காவல் ஆனி 2024 - முழுநாள் கருத்தரங்கு

இடம்: சங்கிலியன் அரங்கம் - வலம்புரி நட்சத்திர விடுதி

திகதி: 13/07/2024 [ஆனித் திங்கள் 29ம் நாள்]

நேரம்: காலை 9.00 தொடக்கம் - மாலை 17.00 வரை
திருச்சிற்றம்பலம்

ஆனி மகம் முத்தமிழ் வாதவூரர் குருபூசையை முன்னிட்டு, சைவநீதி மற்றும் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடத்தின் சைவ மாணவர் சபை நடாத்தும் "சைவ அறங்காவல்" முழு நாள் கருத்தரங்கு ஆனித் திங்கள் 29ம் நாள் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கருத்தரங்கு குறிப்பாக சமய ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், இந்து இளைஞர் கழகங்கள், திருக்கோயில் அறங்காவலர் சபையினர், பல்கலைக் கழக இந்து மாணவர் சங்கங்கள், மற்றும் சைவ சமயத் தலைவர்களை கருத்தில் நிறுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சைவ சமயத்தின் தொன்மை மற்றும் உண்மைகள், திருமுறைச் சிறப்பு, சாத்திரச் சிறப்பு பற்றிய சொற்பொழிவுகள், இலங்கையின் சைவத்தின் தற்போதய நிலை மற்றும் மேம்பாட்டுக்கான வழிமுறைகள் பற்றிய கலந்துரையாடல் மற்றும் ஐயம் தெளிவோம் என்ற தொனிப்பொருளில் சமயக் கேள்வி பதில்களுடன் கூடிய பயனுள்ள அரங்கமாக இந்த "சைவ அறங்காவல்" "சைவ அறங்காவல்" இடம்பெறும்.

"நிகழ்ச்சித் தலைமை" - சிவத்திரு.செந்தமிழாதன் - இளம்புலவர், தென்னாடு.

வளவாளர்கள்:

(1) "திருமுறைச் சிறப்பு மற்றும் சாத்திரச் சிறப்பு" - செந்தமிழரசு முனைவர்.கி.சிவகுமார் - தமிழ்நாடு

(2) "இலங்கையில் சைவம் அன்றும் இன்றும்" - சிவத்திரு.சந்திரமௌலீசன் லலீசன் - அதிபர், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை.

(3) "சைவ அறங்காவல்"- "கலந்துரையாடல்" - சிவத்திரு.குணரத்தினம் பார்த்தீபன் - முதல்வர் , தென்னாடு.

(4)  "மேன்மைகொள் சைவநீதி" - சிவத்திரு.குணா துரைசிங்கம் - தலைவர், சைவநீதி.

பங்குபற்ற விரும்பும் சைவத் தலைவர்கள் ஆனித் திங்கள் 17ம் நாளுக்கு (1-யூலை-2024) முன்னதாக இந்த இணைப்பில் பதிவு செய்துகொள்ளுங்கள். இந்தக் கருத்தரங்கிற்கு நூறு இருக்கைகள் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பதிவு ஒழுங்கில் முன்னுரிமை கொடுக்கப்படும். தயவுசெய்து முன்கூட்டியே உங்கள் பதிவுகளை மேற்கொண்டு, இந்த சிறப்புக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறுவதுடன், எல்லாம்வல்ல அருள்மிகு ஐம்பூதநாதப் பெருமானின் அருளையும் பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.

வழங்கல்கள்:

(1) காலை, மாலை - சிற்றுண்டி மற்றும் குளிர்பானம் / தேநீர்

(2) மதிய உணவு

(3) பங்குபற்றியமைக்கான சான்றிதழ்

(4) தேவை அடிப்படையில் போக்குவரத்துக்கு கொடுப்பனவு

தொடர்புகளுக்கு: 0707701111


அனுசரணை: சைவநீதி மற்றும் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம் ()