தமிழர் - இனமும் வரலாறும்

இடம்: Grevillea அறை, வென்ற்வேர்த்வில் சமூக நடுவம்

திகதி: 04/12/2024 [கார்த்திகைத் திங்கள் 19ம் நாள்] - 04/12/2024

நேரம்: 18.30 - 21.00
சிட்னி தமிழ் மன்றத்தின் ஆதரவுடன்
ஒசுத்திரேலியா அறம் அறக்கட்டளை வழங்கும்
கருத்தரங்கு

நாணயவியல், கல்வெட்டு, செப்பேடுகள் மற்றும் ஓலைச்சுவடிகள் ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன் பங்குகொண்டு சிறப்பிக்கும் சிறப்பு கருத்தரங்கு.

மாலை 6.30 மணிமுதல் 8.00 மணிவரை - தமிழர் இனமும் வரலாறும்
மாலை 8.00 மணிமுதல் 9.00 மணிவரை - ஆதித்த கரிகாலன் கொலை - நடந்தது என்ன ?

50 இருக்கைகள் மட்டும் இருப்பதால் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

எமது வரலாறுகள் பல வகைகளிலும் திரிக்கப்பட்டு, தமிழரின் தொன்மை மற்றும் சிறப்புகள் மழுங்கடிக்கப்பட்டு வந்ததை யாவரும் அறிந்ததே. ஆனால் இந்த வலைத் தொழில்நுட்ப வளர்ச்சிக் காலத்தில், பூசணிக்காயை சோற்றில் மூடுவது போன்ற நாடகங்களை அரங்கேற்ற முடியாது. யாவரையும் சிந்திக்கவைக்கும், தொல்லியல் ஆவணங்கள் அடிப்படையிலும் மற்றும் தத்துவ சிந்தனை,தர்க்கவியல் அடிப்படையிலும் வரலாற்றினை விளக்க வல்லவர் இரா.மன்னர் மன்னன் அவர்கள். வரலாற்று ஆர்வலர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு.


அனுசரணை: அறம் அறக்கட்டளை (Aram Foundation Australia) மற்றும் சிட்னி தமிழ் மன்றம் (Sydney Tamil Mandram)