அன்புடையீர் வணக்கம்

வாசி தீரவே, காசு நல்குவீர்!
மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே
இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்!
கறை கொள் காசினை முறைமை நல்குமே!

தென்னாடு செந்தமிழ் ஆகம மடம், யாழ்ப்பாணம், கொக்குவிலில் அமைந்துள்ள ஒரு சைவ மடமாகும். இது சங்கம் வளர்த்த விரிசடைக்கடவுள் இருந்த, கடல்கொண்ட தென்னாட்டின் நினைவாக,  இலங்கையிலும், உலகிலும் தமிழர் பண்பாட்டினையும் அதன் ஒரு கூறான சைவ சமயத்தினையும் பேணுவதற்காக உருவாக்கப்பட்டது.

தென்னாடு மடமானது, பலவகையான சிவ நெறிகளை தொடர்ந்து செய்துவருகின்றது. குறிப்பாக இளம் சமூகத்தினரிடையே சைவ சமய மேம்பாடு, அறநெறிக் கல்வி, மார்கழிப் பெருவிழா, சைவ அறங்காவல் மற்றும் சைவ மேம்பாட்டு நிகழ்வுகள், சைவ சமயப் பதிப்புகள் மற்றும் வெளியீடுகள், புதிய சிவன் கோயில்கள் அமைத்தல், தொன்மையான சிவன் கோயில்களைப் பாதுகாத்தல் மற்றும் பழமை மாறாமல் புதுப்பித்தல், தமிழ்மொழி வழிபாடுகள், வழிபாட்டு பயிற்சிகள், தீக்கை வழங்குதல் மற்றும் ஒவ்வொரு திங்களும் தவறாத நிறைமதி சிறப்பு வழிபாடுகளும் உணவு வழங்கலும் என பலவகையான சிவ புண்ணியங்களை செய்து வருகிறது.

இந்த சிவ புண்ணியங்களுக்கு நீங்களும் உதவ இறைவன் திருவுளம் கொண்டு, அதனை இறைவன் உங்களுக்கு உணர்த்துமிடத்து, உங்களால் இயலுமான அறக்கொடையை நீங்கள் எங்களுக்கு வழங்கலாம்.

 

The Thennadu Tamil Agamic Mutt is a Saiva Mutt located in Kokuvil, Jaffna. It was established in memory of the submerged land of Thennadu, a flourishing region during the Sangam era and home to the first Tamil Sangam, headed by Virisadai Kadavul. The Mutt aims to preserve and promote Tamil culture and the Saiva religion in Sri Lanka and globally.

 

The Thennadu Mutt engages in various Saiva activities, focusing on promoting Saivism among the youth and providing moral education. It organizes the grand festival Markali Pruvila every December and works to preserve Saiva traditions. Additionally, the Mutt publishes Saiva texts, establishes new Siva temples, and protects and restores ancient Siva temples without altering their heritage.The Mutt also promotes Tamil as a language for praising God and conducting rituals. It offers training, provides initiation services, conducts special full moon prayers, and provides food to the community.

 

If you feel inspired by the divine will and are moved to support these sacred activities, you can offer your charitable contributions to us.