தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம்

தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடமானது, சைவத்தினையும், தமிழ்ப் பண்பாட்டினையும் பேணிப் பாதுகாப்பதற்கும் அவற்றினை அடுத்த தலைமுறையினரிடம் ஊடுகடத்தவும் உருவாக்கப்பட்ட சைவத் தமிழ் மடம் ஆகும்.

இந்த மடம், திருவருள் உள்நின்று உணர்த்தியத்தின் பயனாக, சிவத்திரு.தென்னவன் பார்த்தீபன் (குணரத்தினம் பார்த்தீபன்) அவர்களால் 2019ம் ஆண்டு யாழ்ப்பாணம் கொக்குவில் பதியில் உருவாக்கப்பட்டது. இந்த மடத்தில் அருள்மிகு மனோன்மணி அம்மனுடனுறை அருள்மிகு ஐம்பூதநாதப்பெருமான் மன்னி நிறைந்து அருள்மழை பொழிந்து வருகிறார்.

இது செந்தமிழ் ஆகம வழியில், கல்லால மரத்தின் கீழ் இருந்து ஞானத்தினைப் போதிக்கும் "தென்முகக் கடவுளை" ஆதீன முதல்வராக ஏற்று ஒழுகும் சைவத்தமிழ் மடமாகும்.

14 மார்ச்
[பங்குனி 1, வெள்ளிக்கிழமை] வெள்ளி, உபயம்: சிவத்திரு.மதிசயன் மாணிக்கவாசகர் மற்றும் குடும்பத்தினர் (கொக்குவில் (கனடா))
21 யூலை
[ஆடி 4 சனிக்கிழமை] ஞாயிறு, உபயம்: திருமதி.நாகேஸ்வரி நாகராஜா மற்றும் பிள்ளைகள் (கொக்குவில் (கனடா))
13 யூலை
[ஆனித் திங்கள் 29ம் நாள்] சனி, உபயம்: சைவநீதி மற்றும் தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமடம்

தென்னாடுத் திண்ணை

நீங்களே செய்யக்கூடிய சிவப்பேற்றுச் சடங்குகள்

மேலும் வாசிக்க...
திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க...

மேலும் வாசிக்க...
எடுத்த காரியம் வெற்றிபெற, செய்வினைகள் அகல...

மேலும் வாசிக்க...
விதியை வெல்லும் வழிமுறைகள் - விதிமாற்றும் விரிசடையான்

மேலும் வாசிக்க...

தென்னாடு திங்கள் இதழ்கள்

புரட்டாசித் திங்கள் இதழ் - 49
வெளியீடு: 17/09/2024
மேலும் வாசிக்க...
ஆவணித் திங்கள் இதழ் - 48
வெளியீடு: 19/08/2024
மேலும் வாசிக்க...
ஆடித் திங்கள் இதழ் - 47
வெளியீடு: 20/07/2024
மேலும் வாசிக்க...
ஆனித் திங்கள் இதழ் - 46
வெளியீடு: 20/06/2024
மேலும் வாசிக்க...

தெய்வத்தமிழின் தொன்மை பெருமைகள்

  மாணிக்கவாசகர்
 
மன்னுமாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும் - திருவாசகம்
  திருமூல
  நாயனார்
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே
  சேக்கிழார்
மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டர் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்
  பரஞ்சோதி முனிவர்
கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழி போல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ
  பரஞ்சோதி முனிவர்
தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்தது, எலும்பு பெண் உருவாகக்
கண்டதும், மறைக் கதவினைத் திறந்ததும், கன்னித்
தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்
   திருஞான
  சம்பந்தர்
தடம் கொண்டது ஒர் தாமரைப்பொன் முடி தன்மேல்
குடம் கொண்டு அடியார் குளிர்நீர் சுமந்து ஆட்டப்
படம் கொண்டது ஓர் பாம்பு அரை ஆர்த்த பரமன் 
இடம் கொண்டு இருந்தான் தன் இடைமருது ஈதோ
சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு பகுதி 1
திருவாசகம் சிவபுராணம் பகுதி 1
அடியாரைத் தேடி - குளித்தலை இராமலிங்கம்